top of page

உயிருக்குள் உயிராய் வாழ்ந்து, ஈருயிர் ஓருயிர் ஆனதே! (ஒர் பழைய பரிணாமத்தின், புதிய அவதாரம்)

இவ்வுலகில், தொராயமாக நுண்ணுயிரிகள், தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் என்று 87 லட்சம் உயிரினங்கள் உள்ளன. அந்த 87 லட்சத்தில், ஒன்று தான் மனித இனம். மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிற உயிரினங்களுடன் சார்ந்து வாழ்கின்றன. நுண்ணுயிரிகள், அதாவது நம் கண்களால் நேரடியாக காணமுடியாத, பாக்டீரியா, நுண்பாசிகள், அமிபாக்கள் போன்றவை அவற்றின் நுண்ணிய அளவின் காரணமாக, பிற உயிரினங்களின் உடலுக்குளும் வாழ்கின்றன. மனித நம் உடலிலே, கோடிக்கணக்கான பாக்டீரியா போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. அவை நம்முள் வாழ்ந்து பல நன்மைகளை செய்கின்றன.

            தாவரங்களின் வளர்ச்சிக்கு மூன்று சத்துக்கள், மிக முக்கியமானவை – நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம். இதில் நைட்ரஜன் காற்றில் 70% உள்ளது ஆனால் அவற்றை கிரகிக்கும் திறன் தாவரங்களுக்கு இல்லை. ஆகவே பண்நெடும் காலமாக, மண்ணில், வேரின் அருகிலுள்ள நுண்ணிய பாக்டீயாக்கள், காற்றில் இருக்கும் நைட்ரஜனை கிரகித்து, நைட்ரேட் ஆக மாற்றி தாவரங்களுக்கு வேர் மூலம் அளிக்கின்றன. பதிலுக்கு தாவரங்களிடமிருந்து, தனது வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்றுக் கொள்ளும். இதுவே கூட்டுவாழ்வியலின் இலக்கணமாகும். பருப்பு வகை தாவரங்களின் வேர் செல்களுக்குள், ரைசோபியம் என்னும் பாக்கிடீயா ஊடுருவி, நைட்ரஜன் கொடுத்து வாழ்கின்றன. பருப்பு, கடலைகளில், அதில புரதச்சத்து உள்ளதற்கு, இந்த கூட்டுவாழ்வியல் ஒர் முக்கிய காரணியாகும்.

            நுண்பாசிகள், அதாவது நாம் நீர்நிலைகளில் காணும் பச்சை பாசிகள்தான், பூக்கும் தாவரங்களின் முன்னோர்கள் ஆவர். பூக்கும் தாவரங்களை போல், இந்த நுண்பாசிகளுக்கும் நைட்ரஜனை கிரகிக்கும் திறனில்லை. அவைகளும் பாக்டீரியாவை சார்ந்து வாழ்கின்றன. கடலில் பல்கிபெருகி வாழும் ப்ராடோஸ்பெரா பிகலோவி (இனி பிகலோவி என்று குறிப்பிடப்படும்) என்னும் ஒர்செல் கடற்பாசியினுள், அசிடெலோசையனோ தலாசா பாக்டீரியா (இனி தலாசா என்று குறிப்பிடப்படும்) கூட்டுறவாய் வாழ்ந்து நைட்ரேட் கொடுத்து, ஊட்டசத்துக்கள் பெற்று வாழ்ந்து வருகின்றன என்று பல ஆண்டுகள் முன்பு கண்டறிந்தனர். அமெரிக்காவின், கலிப்போர்னியா பல்கலைக்கழகத்திலுள்ள பேராசிரியர் ஜொநதன் ஜெர் மற்றும் அவரது குழுவினர் இந்த கூட்டு வாழ்வியல் பற்றி பல ஆண்டுகளாய ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களின் ஆய்வு முடிவுகளை சமீபத்தில தலைச்சிறந்த அறிவியல் பத்திரிக்கையான “அறிவியல்” இதழில் வெளியீட்டுள்ளனர். இந்த ஆய்வில் ஒர் சிறப்பு வகை எக்ஸ் ரே கதிர்கள் கொண்டு, பல்வேறு நேரங்களில் பிகலோவி நுண்பாசியை படமெடுத்து பார்த்ததில், ஒவ்வொரு நுண்பாசிக்குள்ளும், ஒரு தலாசா பாக்டீரியா மட்டுமே உள்ளது என்று அறிந்தனர். மேலும், நுண்பாசி இரண்டாக பிளந்து இனப்பெருக்கம் செய்யும் போது ,தலாசா பாக்டீரியாவும் சரியாக இரண்டாக பிளந்து ஒரே நேரத்தில் இனப்பெருக்கம் நடக்கின்றன. மேலும் நுண்பாசிக்குள் வாழும் தலாசா பாக்டீயா, நைட்ரஜன் கிரக்க தேவையான மரப்பணுக்களை தவிர பல மரப்பணுக்களை இழந்துள்ளது என்று அறிப்பட்டது. புரதங்களை ஆய்வு செய்ததில், பல நுண்பாசிக்களின் புரத்தங்கள், தலாசா பாக்டீரியாவினுள் கண்டறிப்பட்டன. அதாவது தலாசா இழந்த மரபணுக்களின், வேலைகளை நுண்பாசிகளின் மரப்பணுக்களின் புரதங்கள் வந்து செய்கின்றன். ஒரே நேரத்தில் இனப்பெருக்கம் செய்வது, தனது மரபணுக்களை இழந்து நுண்பாசியின் மரபணுக்களை சார்ந்து வாழும் இத்தகைய குணாதிசங்களை கொண்டு, தலாசா பாக்டீயா தனி உயிரல்ல, அது நுண்பாசிக்குள், ஒரு செல்லுறுப்பாக மாறிவிட்டது என்று அறிவித்து உள்ளனர். இந்த செல்லுறுப்புக்கு “நைட்ரோப்லாஸ்ட்” என்று பெயரிட்டுள்ளனர். இது சுமார் 9 கோடி வருடங்களுக்கு முன்னர் நடந்து இருக்கலாம் என்று கூறி உள்ளனர்.

            ஒர் உயிரினம், பெரிய செல்லுக்குள் நுழைந்து செல் உறுப்பாக மாறுவது புதிது அல்ல. இவ்வுலகில் முதலில், ஊதா பாக்டீரியா பெரிய செல்லுக்குள் நுழைந்து ஆற்றல் தரும் மைட்டோகாண்டீயாவாவும், அதேப்போல், சைனோபாக்டீரியா ஒளிச்சேர்கை செய்யும் க்ளோரோப்லாஸ்டாகவும் உருமாறின. அதன் பின்னரே, அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகள் பூமியில் தோன்றின. ஆனால் க்ளோரோப்லாஸ்ட் செல் உறுப்பு, 200 கோடி வருடங்கள் முன்பு நிகழ்ந்த நிகழ்வு ஆகும். நைட்ரோப்லாஸ்ட் போல், சில கோடி வருடங்களுக்கு முன்பு, விலங்குகளின் மூதாதையரான பாலினா என்னும் ஓர் செல் அமீபாவில், ஒர் சைனோபாக்டீயா புகுந்து உறுப்பாகி, சூரிய ஒளியின் மூலம் உணவு படைக்கிறது. இன்னும் பல கோடி வருடங்களில், பரிணாம வளர்ச்சியில், பாக்டீயா துணையின்றி தாவரங்கள் நைட்ரஜன் கிரகிக்கும் திறனை பெறலாம். மேலும் விலங்குகள் (மனிதன் உட்பட) சூரிய ஒளியிலிருந்து, தாவரங்கள் போல், தானே உணவு தயாரித்து வாழும் நிலைக்கு வரலாம். இயற்கையே இதற்கு பதில், எதுவாயினும் பல கோடி வருடங்கள் பின், நாம் இருந்து அதை காணும் சாதியமில்லை!

 

உயிருக்குள் உயிராய் வாழ்ந்து, இந்த பிகலோவி நுண்பாசி, தலாசா பாக்டீயா ஆகிய ஈருயிர், ஓருயிர் ஆக மாறிய இக்காதல், மனிதர் உணர்ந்து கொள்ள, இது மனிதக் காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது!

 
 
 

Recent Posts

See All

Comments


bottom of page